×

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேர்ந்ததாக இபிஎஸ் பொய்யான அறிக்கை: கேரள நிர்வாகி தகவல்

சேலம்: கேரள மாநில ஓபிஎஸ் அணி செயலாளர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரள மாநிலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் பார்த்து அவருடன் இணைந்ததாக வந்த தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். கேரள மாநில பொருளாளர் ஜெயலால், துணை செயலாளர் ஹரீஷ், திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், துணை செயலாளர் ராதிகா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

கொல்லம் மாவட்ட செயலாளர் என கூறிக்கொள்ளும் சிதம்பரம்பிள்ளை, மாவட்ட தலைவர் என கூறிக் கொள்ளும் லத்திகாகுமாரி ஆகியோருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் பொறுப்பில் இருப்பதாக கூறி எடப்பாடி அணிக்கு விலைபோயுள்ளனர். கேரள மாநில அவைத்தலைவர் ஜியோ வெம்பிலான், இணைச்செயலாளர் மல்லிகா, மாநில துணைச்செயலாளர் யசோதா ஆகியோர் ஓ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேர்ந்ததாக இபிஎஸ் பொய்யான அறிக்கை: கேரள நிர்வாகி தகவல் appeared first on Dinakaran.

Tags : EPS ,OPS ,Kerala ,Salem ,Kerala State OPS Team ,Manikandan ,State OPS ,Edappadi Palaniswami ,State Treasurer ,Jayalal ,Deputy Secretary… ,Dinakaran ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்