×

சென்னை பெருநகர காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான பெண் அவரது குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

சென்னை: கடந்த 05.09.2023 அன்று சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆதரவின்றி இருந்த 19 வயது மதிக்கதக்க பெண்ணை சென்னை பெருநகர காவல், “காவல் கரங்கள்” மூலம் மீட்டு பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட பெண்ணை அவரது குடும்பத்துடன் சேர்ந்து வைக்க வேண்டி அவரிடம் விசாரணை செய்ததில் அந்தப்பெண்ணின் பெயர் நந்தினி என்பதும், இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் மாடல் காலனியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

நந்தினி அவரது தாய் மாமா வினய் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 01.09.2023 அன்று அவரது பாட்டியிடம் சண்டை போட்டுவிட்டு யாரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பெண்ணின் தந்தை முருகேஸ் என்பவர் நந்தினி காணாமல் போனது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்பேரில் காவல் கரங்கள் காவல் குழுவினர் ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, மீட்கப்பட்ட நளினியின் தந்தை, தாய், கணவர் மற்றும் ஆந்திர மாநிலம், குப்பம் நகர காவல் நிலைய காவலர்களை சென்னை வரவழைத்து நேற்று (09.01.2024) சென்னை பெருநகர காவல் துணை ஆணையாளர் முனைவர்.மணிவண்ணன், (தலைமையிடம்) மற்றும் காவல் உதவி ஆணையாளர் கண்ணன், (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) ஆகியோர் முன்னிலையில் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

01.09.2023 அன்று ஆந்திர மாநிலத்தில் காணாமல் போன 19 வயது பெண்ணை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் கரங்கள் குழுவினர் மற்றம் தன்னார்வலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

The post சென்னை பெருநகர காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான பெண் அவரது குடும்பத்தினருடன் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chennai Metropolitan Police ,Chennai ,Central Railway Station ,Kaval Karaganal ,
× RELATED சென்னையில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம்!!