×

குட்கா வழக்கில் இருந்து அண்ணனை மீட்க தம்பியிடம் ரூ.7 லட்சம் வாங்கி மோசடி: ஒருவர் கைது; 2 பேரிடம் விசாரணை

தண்டையார்பேட்டை: சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவை சேர்ந்தவர் சுகந்த் (35). கொண்டிதோப்பு பெத்து நாயக்கன் தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் உக்கம்சந்த், குட்கா விற்ற வழக்கில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அண்ணன் உக்கம்சந்த்தை குட்கா வழக்கில் இருந்து மீட்க கூடுவாஞ்சேரி-மேடம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த கேமாராம் (47) என்பவரிடம் சுகந்த் பேசியுள்ளார்.

அப்போது அவர், உனது அண்ணனை குட்கா வழக்கில் இருந்து மீட்கிறேன். எனக்கு போலீஸ் உயரதிகாரிகள், நீதிபதிகள் நன்றாக தெரியும். ரூ.6 லட்சம் தந்தால் உடனடியாக வழக்கில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கிறேன் என கேமாராம் கூறியுள்ளார். அவரை நம்பி கடந்த நவம்பர் மாதம் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து கேமாராம் கூட்டாளிகளான அசோக், வக்கீல் ராஜ் ஆகியோர், செல்போன் மூலம் சுகந்திடம் தொடர்புகொண்டு ஜிபே மூலம் ரூ.1 லட்சம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அவர்களுக்கும் பணம் அனுப்பியுள்ளார்.

ஆனால் குட்கா வழக்கில் இருந்து அண்ணன் உக்கம்சந்த்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து கேமாராம், அசோக், வக்கீல் ராஜ் ஆகியோரிடம் கேட்டபோது சுகந்த்தை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் சுகந்த் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேமாராமை கைது செய்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அசோக் மற்றும் வக்கீல் ராஜ் ஆகியோர் சுகந்திடம் பணம் பெற்றது உண்மையா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்கா வழக்கில் இருந்து அண்ணனை மீட்க தம்பியிடம் ரூ.7 லட்சம் வாங்கி மோசடி: ஒருவர் கைது; 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gutka ,Thandaiyarpet ,Sukanth ,Thangasalai Street, Chaukarpet, Chennai ,Konditoppu Pethu ,Nayakkan Street ,Ukkamchand ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது