×

வத்தலக்குண்டுவிற்கு வந்த விருந்தாளிகள்

*பொதுமக்கள், விவசாயிகள் வியப்பு

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே, கடற்கரை கொக்குகள் முகாமிட்டிருப்பதை பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் வியப்பு அடைந்தனர்.கடல்கொக்கு, கரைக் கொக்கு, கருங்கொக்கு என அழைக்கப்படும் ‘வெஸ்டர்ன் ரீஃப் ஹேரான்’ என்னும் பறவை பெரும்பாலும் கடற்கரையோரப் பகுதிகளிலும், கழிமுகங்களிலும் மட்டுமே காணப்படும்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, வெங்கடாஸ்திரிக் கோட்டை கிராமப் பகுதியில் கடல்கொக்குகள் சில முகாமிட்டிருந்தன. அரிதினும் அரிதாகவே இந்த பறவைகள் சமவெளிகளுக்கு வரும். இதை பொதுமக்களும், விவசாயிகளும் ஆச்சரியமுடம் பார்வையிட்ட்னார். சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட பறவைகள் ஆய்வாளர் வாழைக்குமார் கூறியதாவது, ‘எனது ஊரில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்து, கடந்த 6 வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை 124 வகையான பறவைகளை வெங்கடாஸ்திரிக்கோட்டை கிராமத்தில் பதிவு செய்துள்ளேன்.

நேற்று முன் தினம் வழக்கம் போல பறவை நோக்கலுக்கு சென்றிருந்தபோது எதிர்பாராவிதமாக 2 கடல் கொக்குகள் தரையிறங்கி பூச்சிகளை உண்ணத் தொடங்கியது. கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த கருங்கொக்குகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்திருப்பது பறவைகள் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வாகும். இந்தப் பறவையின் வருகை குறித்து உடனடியாக உலகளாவிய பறவைகள் ஆய்வு நிறுவனமான ஈ.பேர்டு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது’ என்றார்.

The post வத்தலக்குண்டுவிற்கு வந்த விருந்தாளிகள் appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Kadalkoku ,Karaik Kokku ,Karungokuku ,Vattalakundu ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...