×

சுவாமியே சரணம் ஐயப்பா!: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று நடை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆவதால் இந்த சீசனில் பல நாட்களில் சன்னிதானத்திற்கு செல்ல முடியாமல் பல பக்தர்கள் பாதி வழியிலேயே தங்களது ஊர்களுக்கு திரும்பிய சம்பவங்களும் நடந்து வருகின்றன. வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறி வருகின்றனர். வருகின்ற 15ம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம் போர்ட் சார்பில், இன்று முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.

14ம் தேதி 50,000 பேருக்கும், 15ம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில், மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https:// sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஜன. 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்யலாம். ஜனவரி 16ம் தேதி 50,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜன. 17 முதல் 20ம் தேதி வரை தலா 60,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பம்பா, நிலக்கல், வண்டிப் பெரியாறில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

The post சுவாமியே சரணம் ஐயப்பா!: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Swami ,Ayyappa ,Sabarimala ,Makaravilakku Pooja ,Thiruvananthapuram ,Makaravilakku Puja ,Ayyappan ,Makara Lampu Puja ,Sabarimala Ayyappan ,Swamiye ,Saranam Ayyappa ,
× RELATED திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!!