×

சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் உடலை ஜார்கண்ட் கொண்டு செல்ல உதவிய எம்பிக்கு பெற்றோர் நன்றி

 

ஊட்டி, ஜன.10: பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியின் 3 வயது மகள் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. உடனடி நிவாரண தொகையை குழந்தையின் பெற்றோரிடம் மாவட்ட கலெக்டர் அருணா வழங்கினார். சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் உடலை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கொண்டு செல்லும் முழு செலவையும் நீலகிரி தொகுதி எம்பி ராசா ஏற்று கொண்டார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்தில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் குழந்தையின் உடலுக்கு எம்பி ராசா சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குழந்தையின் உடலுடன் குடும்பத்தினர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி செல்வதற்கான விமான டிக்கெட்டை வழங்கி அனுப்பி வைத்தார். குழந்தையின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலின், நீலகிரி எம்பி ராசா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

The post சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் உடலை ஜார்கண்ட் கொண்டு செல்ல உதவிய எம்பிக்கு பெற்றோர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Mangorange ,Pandalur ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...