×

மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் காட்டன் பேப் 2023-24 கைத்தறி கண்காட்சி

 

மதுரை, ஜன. 10: மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் ‘காட்டன் பேப் 2023-24’ கைத்தறி கண்காட்சி ஜன.17ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து ‘காட்டன் பேப்’ அமைப்பாளர் ஜாவித் கூறியதாவது: பட்டு உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் பட்டிற்கு உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் அதிக வரவேற்பு உள்ளது. இவ்வகையில் டஸ்ஸர், எரி, மல்பெர்ரி மற்றும் மூகா ஆகிய நான்கு வகை பட்டுகள் உள்ளன. கண்காட்சியில் விதவிதமான பட்டாடைகள் விற்பனைக்கு உள்ளன.

மேலும், இந்தியாவின் 22 மாநிலங்களில் இருந்து கைத்தறி, கைவினைப் பொருட்கள் இக்கண்காட்சிக்கு வந்துள்ளன. 125 கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்கள், 150 ஸ்டால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பட்டுச் சேலை நெசவாளர்கள், கைத்தறி அமைப்புகள் மற்றும் பட்டு கூட்டுறவு சங்கங்களும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றனர். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் இக்கண்காட்சி நடக்கிறது.

லக்கோனில் இருந்து சுரிதார், சேலைகள், குர்தா, பைஜாமா, மேலாடைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. குஜராத்திலிருந்து எத்னிக் பிரிண்ட் குர்தீஸ், டிரஸ் மெட்டீரியல், பெண்களின் குர்தா, சோளி, ஸ்கர்ட், துப்பட்டா ரகங்கள் வந்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ம.பியில் இருந்து பல வகை ஆடைகள் விற்பனைக்கு உள்ளன. தமிழகத்தின் மதுரை சேலைகள், டிரஸ் மெட்டீரியல், பர்தா மற்றும் படுக்கை விரிப்புகளும் இருக்கின்றன. விதவிதமான நகைகள், கலைப்பொருட்களையும் இங்கிருந்து பொதுமக்கள் வாங்கிச் செல்லலாம். இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் காட்டன் பேப் 2023-24 கைத்தறி கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Cotton Babe ,Gandhi Museum Complex ,Madurai ,Cotton Babe 2023-24 ,Javid ,India ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை