×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 138 பேருந்துகளில் 132 இயக்கம்

நாகப்பட்டினம், ஜன.10: நேற்று தொடங்கிய அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில சங்கங்கள் மட்டுமே பங்கேற்றன. நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 53 பேருந்துகளில் 50 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இது 98 சதவீதம். வேதாரண்யம் அரசு போக்குவரத்து பணிமணியில் 43 பேருந்துகளில் 40 பேருந்துகள் இயக்கப்பட்டது. இது 95 சதவீதம். நாகை அரசு விரைவு பேருந்து பணிமனையில் நேற்று காலை இயக்க வேண்டிய 14 பேருந்துகளும் இயக்கப்பட்டது. மாலை முதல் இரவு இயக்க வேண்டிய 28 பேருந்துகளுக்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தயார் நிலையில் இருப்பதால் நாகை அரசு விரைவு போக்குவரத்துக்கழகததில் 42 பேருந்துகளும் இயக்கப்படுவதால் 100 சதவீதம் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதால் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகளுக்கு எந்த சிரமம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை. நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக தொழில் சங்கங்களான அண்ணா தொழிற்சங்கம், பணியாளர் சமேளனம், சி.ஐ,டி.யு. ஏ.ஐ.டி.சி.யு., நேதாஜி தொழில் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், அண்ணா தொழிற்சங்கத்தினர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன் அதிமுக, பாமக, சிஐடியூ தொழிற்சங்கங்கள் சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 138 பேருந்துகளில் 132 இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Government Transport Corporation ,Nagapattinam Government Transport Workshop ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...