×

தேர்தல் நெருங்குவதால் சிறுபான்மையினர் ஞாபகம் எடப்பாடிக்கு வருகிறது: மாணிக்கம் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று எம்.பி மாணிக்கம் தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து, அண்ணாமலை விமர்சனம் செய்கிறார். அவரிடம் கேட்டால், ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தம் இல்லாத சாவர்க்கர் பெயரை வைக்க வேண்டும் என்பார். தமிழுக்காக போராடுவோரை கேவலப்படுத்துவது அவரது நோக்கம். இதுபோல் பேசவில்லை என்றால், அவரை தமிழக பாஜ தலைவர் வேலையில் இருந்து ஆர்எஸ்எஸ் நீக்கி விடுவார்கள். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என, எடப்பாடி பேசி இருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜ சட்டம் இயற்றும்போது, அதிமுகவின் ஒரே உறுப்பினரான ரவீந்தரநாத் ஆதரவு தெரிவித்தார். தற்போது தேர்தல் வருவதால், எடப்பாடியாருக்கு சிறுபான்மையினர் ஞாபகம் வருகிறது. எடப்பாடியார் பாஜவுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார். தேர்தலின்போது வெளிப்படையாக கூட்டணி அமைப்பார். பாஜவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி நிரூபித்தால், அவர் முதுகெலும்பு உள்ளவர் என ஒப்புக்கொள்வோம். இதுவரை மோடி குறித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாத கட்சியை நடத்துகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

The post தேர்தல் நெருங்குவதால் சிறுபான்மையினர் ஞாபகம் எடப்பாடிக்கு வருகிறது: மாணிக்கம் தாகூர் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Manikam Tagore ,Tiruparangunram ,Manickam Thakur ,Tiruparangunram, Madurai district ,Annamalai ,Madurai ,jallikattu ,Savarkar ,
× RELATED விளம்பரத்துக்காக வழக்கு தாக்கல்…...