×

தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது : தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி : தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (09.01.2024) நாளையும் (10.01.2024) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும்,

திருநெல்வேலி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தூத்துக்குடிமாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே திருநெல்வேலியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஒன்றை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறையால் வழங்கப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது : தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Thoothukudi ,Meteorological Department ,Kanyakumari ,Tirunelveli ,Ramanathapuram ,Tamil Nadu ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...