×

தமிழகத்தில் 2 மணி நிலவரப்படி 96.03% அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2 மணி நிலவரப்படி 96.03% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 100.63% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் 2557 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 2,573 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. பகல் 2 மணி நிலவரப்படி விழுப்புரம் கோட்டத்தில் 90.43%, சேலம்-98.43% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கோவை -93.54%, கும்பகோணம் -94.32%, மதுரை – 98.43%, நெல்லை-99.09% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

The post தமிழகத்தில் 2 மணி நிலவரப்படி 96.03% அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Sivashankar ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Dinakaran ,
× RELATED பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக...