×

மக்களவை, சட்டசபை தேர்தலில் டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: மக்களவை, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. வழக்கில் எந்த பொது நலனும் இல்லை, விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post மக்களவை, சட்டசபை தேர்தலில் டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Lok and Assembly ,PARTHIBAN ,SAIDAPETTA ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...