*பக்தர்கள் மகிழ்ச்சி
நீடாமங்கலம் : தினகரன் செய்தி எதிரொலி நீடாமங்கலம் சந்தானராமசாமி கோயில் தெப்ப குளத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை கழிவுகள் அகற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ளது பாடல் பெற்ற குழந்தை பாக்கியம் அருளும் சந்தானராமசுவாமி கோயில். இக்கோயில் 18ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட பிரதாம சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டது.
இக்காயிலில் சீத்தா, ராமர், லெட்சுமனர் உடனுறை அனுமான், சந்தான கோபாலர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் மாதந்தோறும் ரோகினி நட்சத்திரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயில் எதிரே உள்ள குளத்தில் நீராடி சந்தான கோபால சுவாமியை வணங்கி கோயிலை 24 முறை சுற்றி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் தற்போது நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து முடிந்து ராபத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வருபவர்கள் கோயில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் குழித்து விட்டு சாமிதரிஷனம் செய்ய வரும்போது, கோயில் குளம் சாக்கடை நீரால் சூழ்ந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், சாப்பாட்டு இலைகள், காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தது. இதனால் இந்த குளத்தில் குழித்து சென்றால் நோய் வரலாம் என்ற அச்சத்தில் பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட தயக்கம் அடைந்தனர்.
எனவே சந்தானராமசுவாமி கோயில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை சுற்றி நோய் பரவும் நிலையில் உள்ள கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ற செய்தி கடந்த மாதம் 27ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் தொண்டு அமைப்பினர் குளத்தில் குவிந்து மிதந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனையறிந்த பக்தர்கள் செய்தியை படத்துடன் வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், தொண்டு அமைப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கோண்டனர்.
The post சந்தானராமசாமி கோயில் குளத்தில் குவிந்த கழிவு பொருட்கள் அகற்றம் appeared first on Dinakaran.