×

தமிழகத்தின் பல போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.. போராட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

சென்னை :போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து பணிமனைகள் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. SETC பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள் 100 சதவீதம் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் சிறப்பு பேருந்துகளும் திட்டமிட்டபடி இயங்கும். பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அச்சமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால், அவர்கள் இடத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழகத்தின் பல போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.. போராட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Sivashankar ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Madurai ,Aarani ,Kanchipuram ,Dindivanam ,Salem ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...