×

காவேரிப்பாக்கம் அருகே ஹோமியோபதி படித்துவிட்டு 35 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

*கிளீனிக்கிற்கு சீல் வைத்ததால் பரபரப்பு

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் ஹோமியோபதி படித்துவிட்டு 35 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சை பார்த்து வந்த தனியார் கிளீனிக்கு சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட இணை மருத்துவர் நிவேதிதாவுக்கு நேற்று காலை ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருந்தாளர் வேலு, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் கிளீனிக்கை சோதனை செய்தனர்.

இதில் அந்த கிளீனிக் ஜெயபாலன்(70) என்பவருக்கு சொந்தமானது என்றும் ஜெயபாலன் ஹோமியோபதி படித்துவிட்டு தனது வீட்டிலேயே கிளீனிக் நடத்தி ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருவதும் தெரியவந்தது. இந்த கிளீனிக்கில் 35 ஆண்டுகளாக போலி மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே 2018ம் ஆண்டில் புகாரின் அடிப்படையில் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து கிளீனிக்கில் உள்ள மருந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்து போலி டாக்டர் ஜெயபாலனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த தனியார் கிளீனிக்குக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 35 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

The post காவேரிப்பாக்கம் அருகே ஹோமியோபதி படித்துவிட்டு 35 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Sumathangi ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...