×

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் காட்டு பன்றிகளால் சேதம்

சிவகங்கை,ஜன.9: சிவகங்கை அருகே உள்ள கோவானூர் கிராமத்தில் கண்மாய் நீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் நெல் விவசாயம் செய்துள்ளனர். அறுவடைக்கு இன்னும் 15 நாள்கள் உள்ள நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் நள்ளிரவு வரை விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க வெடி வைத்து விரட்டுகின்றனர். சத்தம் கேட்டு அருகில் உள்ள கண்மாய்களுக்குள் ஓடிவிடுகின்றது.

பின்னர் விவசாயிகள் வந்தவுடன் அதிகாலையில் நெல் வயல்களில் பன்றிகள் கூட்டமாக வந்து நெற்பயிர்களை முற்றிலும் கடித்து சேதப்படுத்துகிறது. மூன்று வாரங்களுக்கு முன் பெய்த மழையால் சேதம். தற்போது காட்டுப் பன்றிகளால் சேதம் என் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஏக்கருக்கு 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், காட்டுப் பன்றிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ஜெயராஜ் கூறியதாவது: நான் ஆறு ஏக்கரில் எல்எல்ஆர் ரக நெற்பயிர் பயிரிட்டுள்ளேன். 25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துளேன். அறுவடைக்கு சில நாட்களே உள்ள நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி விட்டது. இதனால் எங்களுக்கு உரிய இழப்பீடும் பன்றிகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் காட்டு பன்றிகளால் சேதம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Kanmai ,Govanur ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...