×

மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் தொடர் கன மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருக்கழுக்குன்றம், ஜன.9: தொடர் கனமழையால் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் தாலுகாக்களில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், நிலக்கடலை ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள ஏரி, குளம், குட்டை, பாலாறு ஆகியவை நிரம்பியது. மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளில் 90 ஏரிகள் முழுவதும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. மீதமுள்ள ஏரிகளும் நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர் கனமழை காரணமாக விட்டிலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு சில தினங்களே உள்ள நிலையில் திடீர் கனமழை பெய்ததால், சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட 500 ஏக்கர் வேர்க்கடலை, 700 ஏக்கர் தர்ப்பூசணி ஆகியவை துளிர் விடும் நிலையிலேயே மழைநீர் சூழ்ந்ததால், அவைகள் அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் அடுத்த தாதங்குப்பம் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டிருந்த நெல், வேர்க்கடலை போன்ற பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நன்கு விளைந்திருந்த பொன்னி விளைச்சளில் வெள்ளம் பாய்ந்து செல்வதால் அந்த பயிர்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி
உள்ளன.
இதனால், முதிர்ந்தநிலையில் உள்ள நெல்மணிகள் முளைத்து விடும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள
னர். மேலும், ஒருசில தினங்களுக்கு முன்பு பலர் வேர்க்கடலை, நெற்பயிர் நடவு செய்துள்ளனர். அந்த வயல்களிலும் தண்ணீர் செல்வதால் வேர்க்கடலை பயிர்கள் முளைக்காமல் அழுகும் நிலையில் உள்ளது. இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சாலை துண்டிப்பு
கல்பாக்கம் அடுத்த ஐந்து காணி, உய்யாலி குப்பம், இருளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்சாலை அருகே உள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால், மழை நீரை வெளியேற்ற அங்குள்ள தார்சாலையை யாரோ சிலர் துண்டித்ததால் போக்குவரத்து செல்ல முடியாமல் ஐந்து காணி உள்ளிட்ட 3 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

The post மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் தொடர் கன மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,Madhuranthakam ,Thirukkalukunram talukas ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்