×

பழங்குடியின மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு

 

ஊட்டி, ஜன.9: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம், சட்டம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கூடலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீ மதுரை ஊராட்சியில் உள்ள மண்வயல் பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இந்த முகாமில் பழங்குடியின மக்கள் தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் யாரை, எந்தெந்த துறைகளை எவ்வாறு அணுக வேண்டும், என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போல் இந்த முகாமில் பங்கேற்ற பழங்குடியின மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தது. மேலும் பழங்குடி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பழங்குடியின மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Thodar ,Kothar ,Ilurar ,Nayak ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்