×

கவர்னர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல மக்களின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு: ஜார்கண்ட் ஆளுநர் பேச்சு

சென்னை: கவர்னர் பதவி என்பது முழுமையான அதிகாரம் பெற்ற பதவி அல்ல, அரசியல் சாசனத்தை கட்டி காக்க வேண்டிய ஒரு பதவி. மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பெரம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், விவேகானந்தர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழாவை முப்பெரும் விழாவாக நேற்று முன்தினம் கொண்டாடினர். இதில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் மயிலை ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி அபவர்கானந்தாஜி, விவேகானந்த வித்யாலயா பள்ளி தாளாளர் சீனிவாசன், முதல்வர் சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘கவர்னர் பதவி என்பது முழுமையான அதிகாரம் பெற்ற பதவி அல்ல. அரசியல் சாசனத்தை கட்டி காக்க வேண்டிய ஒரு பதவி. மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு. உங்கள் கடமை எது, அதிகாரம் எது என்பதை உணர்ந்து நிற்க வேண்டும்’’ என்றார்.

The post கவர்னர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல மக்களின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் உண்டு: ஜார்கண்ட் ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Jharkhand ,CHENNAI ,CP Radhakrishnan ,Jharkhand Governor ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி...