×

3 மாலத்தீவு அமைச்சர்கள் விவகாரம்; இந்தியாவுக்கான தூதர் நேரில் விளக்கம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் லட்சத்தீவு சென்று திரும்பினார். அவரது பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப், ஆளும் கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

அதற்கு இந்திய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் ெதரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்நாட்டு பிரதமரும், அவர்களின் செயல்களுக்கு மன்னிப்பு கோரினார். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேற்கண்ட விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷஹீப், இன்று டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சகம் அமைத்துள்ள சவுத் பிளாக்கிற்கு இன்று காலை வந்தார். அவர் அங்குள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய கருத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாலத்தீவின் அரசின் சார்பில் வருத்தம் தெரிவித்துவிட்டும் சென்றதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post 3 மாலத்தீவு அமைச்சர்கள் விவகாரம்; இந்தியாவுக்கான தூதர் நேரில் விளக்கம்: வெளியுறவு அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : MALDIVES MINISTERIAL ,INDIA ,FOREIGN ,New Delhi ,Foreign Ministry ,Modi ,Lakshadweev ,Maldives ,Maldives Ministerial Affairs ,Ministry of Foreign Affairs ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...