×

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான தலைப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் அதே சமயம் வேலை வாய்ப்புகளை அளிக்கும். நூறு நபர்கள் செய்யக்கூடிய வேலையை செயற்கை நுண்ணறிவு செய்வதால் அவர்கள் அனைவரும் வேலை இழப்பதற்கான சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதே போல டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒரு நிகழ்வு அல்லது செய்தியை உறுதி செய்வதற்கு முன்பு அதற்கு தொடர்புடைய அனைத்தையும் ஆராய்ந்த பிறகு உறுதி செய்ய வேண்டும்.

தொழில்நுட்பத்தை கையாளுவதில் மற்ற மாநிலம் அல்லது நகரத்தை ஒப்பீடு வகையில் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. மேலும் தமிழக அரசின் கல்வி முறைகள் மாணவர்கள் தொழில்நுட்ப தொடர்புடைய அனைத்து பட்டப்படிப்புகளையும் சிறப்பாக பயின்று பணிக்கு செல்கின்றனர்.

மேலும் குறைந்த படிப்பறிவு உடைய நபர்களுக்கு குரல் மூலமாக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு தொழில் முனைவோருக்கு தமிழில் உள்ள தரவுகளை எளிதில் கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

The post டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister Palanivel Thiagarajan ,Chennai ,World Investor Conference ,Chennai Trade Centre ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...