×

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு

 

ஊட்டி, ஜன.8: நீலகிரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தொடர்பான ஒரு நாள் பணிமனை ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தொடர்பான ஒரு நாள் பணிமனை நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் நீலகிரி மாவட்டத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மேல்முறையீட்டு அலுவலராகவும் மாவட்ட சமூகநல அலுவலர் பராமரிப்பு அலுவலராகவும் ஒவ்வொரு கோட்ட அளவில் கோட்டாச்சியர்களை தலைவராக கொண்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இலவச சட்ட உதவி மையம் சார்பாக வழக்கறிஞர்கள் பங்கேற்று மூத்த குடிமக்கள் நலச்சட்டம் 2007 தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவிதிகள் 2009 மற்றும் மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 தொடர்பாக விவரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்) வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri District Social Welfare Department ,Nilgiri District Collector's Additional Office ,Social Welfare Department ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...