×

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா: ஜன.12ம் தேதி கொடியேற்றம்

 

திருப்பரங்குன்றம், ஜன. 8: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், தெப்பத்திருவிழா ஜன.12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நடப்பு ஆண்டுக்கான திருவிழா ஜன.12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா ஜன.21ம் தேதி நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிம்மாசனம், தங்கசப்பரம், மயில், பூதம், அன்னம், ரிஷபம், ரத்தின சிம்மாசனம் மற்றும் புஷ்ப சப்பரம் ஆகியவற்றில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். தெப்பத்திருவிழா நாளில். சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிம்மாசனத்தில் முதலில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நகரத்தார் மண்டத்திலும், பின்னர் தெப்பத்தேரிலும் எழுந்தருளுவார்.

இதையடுத்து தேர் தெப்பத்தில் வலம் வரும். பின்னர் மீண்டும் மாலையில் மூன்று முறை தெப்பத்தை வலம் வரும். இதையடுத்து தங்ககுதிரை வாகனத்தில் பதினாறு கால் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சூரசம்ஹார லீலை நடைபெறும். தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெப்பத்தில் மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.

The post திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா: ஜன.12ம் தேதி கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram Thepathru Festival ,Tiruparangunram ,Thiruparangunram Subramaniaswamy Temple ,Theppathruvizha ,Thai ,
× RELATED திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி...