×

ஹஜ் மாநாடு ஸ்மிருதி இரானி பங்கேற்பு

ஜெட்டா: ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 2 நாள் பயணமாக நேற்று சவுதி சென்றார். ஜெட்டா வந்தடைந்த ஸ்மிருதியை சவுதிக்கான இந்திய தூதர் சுகேல் கான் வரவேற்றார். சவுதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சகம் இன்று நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார்.

ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சர் தவ்பிக் பின் பவ்ஸான் அல் ரபியாவைவும் அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார். சவுதியில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கிறார்.

The post ஹஜ் மாநாடு ஸ்மிருதி இரானி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Smriti Irani ,Haj Conference ,Jeddah ,Union Minority Affairs Minister ,Saudi Arabia ,Smriti ,India ,Sukhel Khan ,Ministry of Hajj and Umrah Affairs ,Government of Saudi Arabia… ,Hajj Conference ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...