×

சிவ பூஜை மாநாடு

தேவகோட்டை, ஜன.7: தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் சிவ தத்புருஷ தேசிகரின் 110வது ஜென்ம நட்சத்திரம் வழிபாடு மற்றும் சிவநேசர் திருக்கூட்டத்தின் நூறாவது ஆண்டு சிவ பூஜை மாநாடு நடைபெற்றது. முன்னதாக பாலராவாயர் நிலையத்திலிருந்து நகரச் சிவன் கோவியில் வரை சென்று வழிபாடு செய்தனர். நேற்று காலை நகரச் சிவாலய மகா மந்திர உபதேச கொட்டகையில் சிவனடியார்களின் ஆன்மார்த்த சிவ பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதில் மதுரை, திருச்சி, ராமநாதபுரம்,,தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள கலந்து கொண்டு சிவ பூஜை மேற்கொண்டனர்.

The post சிவ பூஜை மாநாடு appeared first on Dinakaran.

Tags : Shiva Puja Conference ,Devakottai ,Janma Nakshatram ,Shiva ,Tatpurusha Desikar ,Devakottai City Shiva Temple ,Balaravayar station ,Nagar Shiva temple ,Dinakaran ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்