×

அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல்

சாயல்குடி,ஜன.7: கீழக்கரை தனியார் கல்லூரி மற்றும் கடலாடி பகுதி பொதுமக்கள் இணைந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல், விளையாட்டு போட்டிகள் நடந்தது. எம்.பி தர்மர் தலைமை வகித்தார். முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் வரவேற்றார். பள்ளியில் பொதுமக்கள், மாணவர்கள் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள், வாலிபால், கபடி, கோகோ உள்ளிட்ட குழுவிளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சொக்கர், பேராசிரியர்கள் சுகுமார், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chayalgudi ,Samatthu Pongal ,Government Higher Secondary School ,Keezhakarai Private College ,Kadladadi ,Dharmer ,Chief Minister ,Rajasekar ,Thavasilingam ,Education ,School ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...