×

மழையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.5 லட்சம் பிணையின்றி வழங்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் விக்கிரமராஜா நேரில் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகன மழை காரணமாக வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தமிழக அரசு நிலுவையில் உள்ள கடன்களுக்கான இ.எம்.ஐ.யை அபராத வட்டியின்றி ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும். வணிகர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் பிணையின்றி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி மூலம் சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஓராண்டுக்கு வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ஒய்.எட்வர்ட், திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா டி.கணேசன் உடனிருந்தனர்.

The post மழையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.5 லட்சம் பிணையின்றி வழங்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் விக்கிரமராஜா நேரில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Chief Secretary ,Chennai ,Federation of Tamil Nadu Merchants Associations ,President ,AM Wickramaraja ,Chief Secretary of ,Tamil Nadu Government ,Sivdas Meena ,Thoothukudi ,Tirunelveli ,Kanyakumari ,Tenkasi ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...