×

மகாராஷ்டிராவில் காவலரை அறைந்த பாஜ எம்எல்ஏ

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே கன்ட்டோன்மென்ட் தொகுதியில் உள்ள சசூன் பொது மருத்துவமனையில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் கலந்து கொண்டார். தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுனில் காம்லேவும் இதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து இறங்கி சென்ற எம்எல்ஏ அவர் போகும் பாதையில் வந்த காவலரை அறைந்துள்ளார். இவர் பாதுகாப்பு பணியில் இருந்த பந்த்கார்டன் காவல்நிலைய காவலராவார்.

எம்எல்ஏ காவலரை அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து பாதிக்கப்பட்ட காவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை எம்எல்ஏ மறுத்துள்ளார். நான் யாரையும் அறையவில்லை. நான் வரும் வழியில் இருந்தவரை ஒதுக்கிவிட்டு முன்னே வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

The post மகாராஷ்டிராவில் காவலரை அறைந்த பாஜ எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Maharashtra ,Pune ,Deputy Chief Minister ,Ajit Pawar ,Sassoon General Hospital ,Pune Cantonment ,Sunil Kamle ,
× RELATED கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டரை...