×

ம.பி. விடுதியில் 26 சிறுமிகள் மாயம்: கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனரா?

போபால்: மத்தியபிரதேச தலைநகர் போபாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அஞ்சால் என்ற சிறுமிகள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விடுதியில் இருந்த வருகை பதிவேட்டை சரி பார்த்தபோது அதில் 68 சிறுமிகளின் பெயர் இருந்துள்ளது. ஆனால் 41 சிறுமிகள் மட்டுமே விடுதியில் இருந்த நிலையில் 26 சிறுமிகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும் அந்த விடுதி அனுமதியின்றி கடந்த 5 வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கி வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து மத்தியபிரதேச தலைமை செயலாளர் வீர ராணா 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாயமான சிறுமிகள் அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனரா என்பது பற்றியும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ம.பி. விடுதியில் 26 சிறுமிகள் மாயம்: கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனரா? appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Madhya Pradesh ,Anjal ,Priyank Kanungo ,National Commission for Protection of Children's Rights ,
× RELATED மபி வனப்பகுதியில் சென்ற போது...