×

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கரண்பூர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இத்தொகுதிக்கான தேர்தல் ஜன.5ல் நடந்தது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார். இங்கு 81.38 சதவீத வாக்குகள் பதிவானது. நாளை அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

The post ராஜஸ்தான் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Karanpur assembly elections ,Karanpur ,Sriganganagar district ,Congress ,Gurmeet Singh ,
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி