×

வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பிரபல எலக்ட்ரானின் கார் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.
உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. மிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Winfast ,Tuticorin ,K. Stalin ,Chennai ,Electron ,Thoothukudi ,Tamil Nadu ,Chief Minister MLA K. ,Stalin ,Winfast Company ,Chief Minister MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில் இந்தியர்கள்...