×

கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு!

கரீபியன்: கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51), தனது 2 மகள்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த்துள்ளனர். ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. தி குட் ஜெர்மன், ஸ்பீட் ரேஸர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கிறிஸ்டியன் ஆலிவர்

ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டியன் ஆலிவர், Speed Racer மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து The Good German படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மரணத்துக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. விபத்து நடந்தவுடன், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆலிவர் (51), அவரது மகள்கள் அன்னிக் (10) மற்றும் மடிதா க்ளெப்சர் (12) மற்றும் விமானத்தின் பைலட் உட்பட நான்கு நபர்களின் உடல்களை மீட்டனர்.

இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் காவல்துறையினர் வெளியிட்ட தகவல்படி, ‘விமானம் செயின்ட் லூசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தை சந்தித்தது’ என குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மீனவர்கள் இந்த விபத்து பற்றி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த விபத்து சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

The post கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Caribbean island ,Caribbean ,Hollywood ,Christian Oliver ,Dinakaran ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்