×

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் காலால் வரித்துறை சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் காலால் வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய கலால்வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 3 வகணங்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் இரவில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் பெற்ற புகாரில்
பெண் உதவி வணிகவரித்துறை அதிகாரியை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே வணிகவரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வணிகர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து வணிகவரித்துறை அலுவலகத்தில் நேற்று இரவு முதல் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது.

நேற்று இரவு 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏ.சி.டி.ஓ ஆக பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவரை விசாரணைக்காக சி.பி.ஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் சில அதிகாரிகளை அலுவலகத்தில் வைத்தே விசாரணை செய்து வருகின்றனர். இந்த தொடர் விசாரணைக்கு பின்னர்தான் எந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர் என்று தெரியவரும். தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் காலால் வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Tax Department ,Commercial Tax ,Office ,Indira Gandhi Square, Puducherry ,Puducherry ,Tax ,Union Excise ,CBI ,Commercial Tax Office ,Dinakaran ,
× RELATED ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்