×

வருமான வரிக் கணக்கு விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 

டெல்லி: வருமான வரிக் கணக்கு விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

2002-2003ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31 க்குள் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை சட்ட நடவடிக்கை எடுத்தது. வருமான முன் வரியை எஸ்.ஜே.சூர்யா செலுத்தவில்லை என்றும் வருமானவரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக தான் செய்துள்ள மேல்முறையீட்டு விசாரணையில் உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதம் தொடர்ந்துள்ளது. தனது மேல்முறையீடு வருமானவரித் துரையின் விசாரணையில் இருக்கும்போது நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.

வருமானவரித்துறை விசாரணையில் ஒரு பிரச்சனை இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடையில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரித்தது. எஸ்.ஜே.சூர்யாவின் மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post வருமான வரிக் கணக்கு விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Income Tax Department ,SJ Surya ,Delhi ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...