×

கல்வராயன்மலையில் 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை : கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல்களை அழித்திட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா உத்தரவுப்படி நேற்று கரியாலூர் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் காவலர்கள் ரவிச்சந்திரன், பிரபு, ஆகியோர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னத்திருப்பதி கிராம கங்காணி ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 6 பேரல்களில் சுமார் 1200 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்றசெயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கல்வராயன்மலையில் 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Ravichandran ,Prabhu ,Kariyalur ,Assistant Inspector ,Gunasekaran ,Kallakurichi ,District ,Superintendent ,Samai Singh Meena ,
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி