×

திருவண்ணாமலை, செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் ₹4.80 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம்

*காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் ரூ.4.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாநிலம் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகளை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே .என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி வளாகத்த்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹1.99 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதையொட்டி, திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

நகராட்சித்தலைவர் நிர்மலாவேல்மாறன் வரவேற்றார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, அறிவுசார் மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இதில் மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், துணைத்தலைவர் சு.ராஜாங்கம், ஆணையாளர் தட்சணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் 4,670 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2480 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இணையதள வசதி, டிஜிட்டல் திரை வசதி, படிப்பறை, பயிற்சி மையம் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

சுமார் 100 பேர் படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. செய்யாறு:செய்யாறு நகரில் 1வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, இதில் பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி நூலகம், அறிவுசார் மையத்தினை நேரில் பார்வையிட்டார். விழாவில் நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்ட விவசாய வர்த்தகர் குழு உறுப்பினர் கோபு, நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் ₹98லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.சரவணன், நகர செயலாளர் சி.கே.அன்பு மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழரசிசுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஆறுமுகம் மற்றும் வேட்டவலம் நகர செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை, செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் ₹4.80 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் appeared first on Dinakaran.

Tags : Library ,Knowledge Center ,Kilipennathur, Thiruvannamalai, Seyyar ,Chief Minister ,Thiruvannamalai ,Tiruvannamalai, Seyyar, Kilibennathur ,M.K.Stal ,Municipal Administration and Water Supply Department ,Thiruvannamalai, Seyyar, ,Kilibennathur ,intellectual center ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி