×

டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) அம்மாநில அரசு குறைத்துள்ளது  இம்மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைத்தது. கலால் வரியை குறைத்ததோடு மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டுமென்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு முன் வைத்தது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை கணிசமாக குறைத்தன. அந்த வரிசையில் தற்போது சத்தீஸ்கர் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பதாக  அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 2 சதவிகிதமும், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 1 சதவிகிதமும் குறைக்கப்படும் என சத்தீஸ்கர் அரசு அறிவித்தது. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு இதனால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post டீசல், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது சத்தீஸ்கர் அரசு! appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh government ,Raipur ,Chhattisgarh state government ,Dinakaran ,
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!