×

குட்கா விற்ற மளிகை கடைக்கு சீல்

சேந்தமங்கலம், ஜன.6: சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் தலைமையில் போலீஸ் எஸ்எஸ்ஐ சுப்பிரமணி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மலையப்பன், துப்புரவு மேற்பார்வையாளர் அழகுராஜா மற்றும் தூய்மை பணியாளர்கள், சேந்தமங்கலம் பேரூராட்சி முழுவதும் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண்டித்தெரு பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது மளிகை கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

The post குட்கா விற்ற மளிகை கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Senthamangalam ,Senthamangalam Municipal Corporation ,SSI Subramani ,Municipal Executive Officer ,Prince ,Municipal Sanitation Inspector ,Malayappan ,Dinakaran ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்