- ஊட்டி
- நகர திமுக
- நிலைய நிலை முகவர்கள்
- ஊட்டி சிட்டி டி.எம்.கே.
- நிலை முகவர்கள்
- நகரம்
- திமுக
- கலைனர் வித்தலாயா
- நகர செயலாளர்
- ஜார்ஜ்
- சிட்டி டிஎம்கே வாக்கல் நிலைய முகவர்கள் கூட்டம்
- தின மலர்
ஊட்டி, ஜன. 6: ஊட்டி நகர திமுக., வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடந்தது. ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகராட்சி துணை தலைவருமான ரவிகுமார், பூத் கமிட்டி பணிகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, ஊட்டி நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்துகொண்டனர்.
The post ஊட்டி நகர திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.