×

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் ரைபாகினா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில் ரஷ்யாவின் அனஸ்டேசியா போடபோவாவுடன் நேற்று மோதிய ரைபாகினா 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக போடபோவா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ரைபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் 3ம் நிலை வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோவை எதிர்கொண்ட பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். முதல் நிலை வீராங்கனை அரினா சபலெங்கா தனது காலிறுதியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார். ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவுடன் ( 16 வயது) மோதிய லிண்டா நோஸ்கோவா (19 வயது) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி ஆட்டங்களில் ரைபாகினா – நோஸ்கோவா, சபலெங்கா – அசரெங்கா மோதுகின்றனர்.

The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Brisbane International Tennis ,Rybakina ,Brisbane ,Kazakhstan ,Elana Rybakina ,Brisbane International ,Australia ,Russia ,Anastasia Podabova ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா