×

டிஜிபிக்கள் மாநாடு ஜெய்ப்பூரில் தொடக்கம்: மோடி இன்று பங்கேற்பு

ஜெய்ப்பூர்: அனைத்து மாநில டிஜிபிக்கள் மாநாடு ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசுகிறார். அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிபிக்களின் 58வது மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. டிஜிபி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் (ஐஜிபி) தரத்தில் உள்ள சுமார் 250 அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, உளவுத்துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கங்களை வழங்கினார். மேலும் மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பைகளை வழங்கினார். அதோடு தேச சேவையில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இன்றும், நாளையும் நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

The post டிஜிபிக்கள் மாநாடு ஜெய்ப்பூரில் தொடக்கம்: மோடி இன்று பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DGPS Conference ,Jaipur ,Modi ,Jaipur: ,All State DGPs Conference ,58th Conference of All State DGPs and IGPs ,Jaipur, Rajasthan State ,TGB ,Inspector ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...