×

பதவி உயர்வு, மாநில முன்னுரிமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பினர் நன்றி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட் மற்றும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர். அப்போது, தொடக்க கல்வித்துறையில் இதுவரை இருந்து வந்த விதிகளில் மாற்றம் செய்து ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை(State Seniority) மற்றும் பதவி உயர்வுக்கான விதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள அரசாணையின் மூலம், பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களைப்போல மாநில அளவில் முன்னுரிமை, இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடு நீக்கம், நேரடி நியமனப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முரண்பாடு நீக்கம் என்ற முக்கனிகள் இந்த ஒரே அரசாணையில் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு நியமன நாள்படி காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மிகச்சரியான மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதவி உயர்வு பரவலாக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பதவி உயர்வு வாய்ப்பு, நேரடி நியமனம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருந்த நிலையில் மிகப்பெரும் மாற்றத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மனதார பாராட்டுகிறது. தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 4 பதவி உயர்வுகள் பெறும் வகையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 2 பதவி உயர்வுகள் பெறும் வகையிலும் அனைத்து பதவி உயர்வுகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசாணையை புத்தாண்டு பரிசாக தந்த தமிழ்நாடு முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

The post பதவி உயர்வு, மாநில முன்னுரிமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசிரியர் கூட்டமைப்பினர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,General Secretary ,Graduate ,Teachers ,Federation ,Patrick Raymond ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...