×

பாஜவில் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் சபை பொறுப்பிலிருந்து நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஷைஜு குரியன். பாதிரியார் ஆவார். பத்தனம்திட்டா மாவட்டம் நிலக்கல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை செயலாளராக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிரியார் ஷைஜு குரியன் உட்பட ஆர்த்தடாக்ஸ் சபையை சேர்ந்த 47 பேர் பாஜவில் சேர்ந்தனர். அதைத்தொடர்ந்து ஷைஜு குரியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஷைஜு குரியன் ஆர்த்தடாக்ஸ் சபை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பாதிரியார் ஷைஜு குரியன் மீது ஏராளமான கிரிமினல் புகார்கள் இருப்பதாகவும், அதில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் பாஜவில் சேர்ந்ததாகவும் ஆர்த்தடாக்ஸ் சபையை சேர்ந்தவர்கள் கூறினர். இதனிடையே இளம் பெண்ணிடம் ஆபசமாக பேசியதாக பாதிரியார் ஷைஜு குரியன் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆர்த்தடாக்ஸ் சபையை சேர்ந்த மேத்யூ என்ற பாதிரியார் அளித்த புகாரில், எங்களது சபையை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் பாதிரியார் ஷைஜு குரியன் ஆபாசமாக பேசியுள்ளார். இது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜவில் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் சபை பொறுப்பிலிருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Christian ,BJP ,Thiruvananthapuram ,Shaiju Kurian ,Kottayam, Kerala ,Pathanamthitta District Nilakkal Orthodox Christian Church ,Orthodox Church ,
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...