×

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். 15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், வரும் 9-ஆம் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. பொங்கல் திருநாளுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட ஏராளமான முதன்மை பணிகள் இருக்கும்.

பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பர். இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நிதி கூடுதலாக செலவாகும் என்பதால் நிதித்துறை அதிகாரிகளுடன் பேசிவிட்டு நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

The post போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Transport Unions ,Minister ,Sivasankar ,Chennai ,Transport Union ,Transport ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி