×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெற்பயிற்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க உத்தரவு

* விவசாயிகள் கோரிக்கை ஏற்பு n கலெக்டர் நடவடிக்கை

நாகப்பட்டினம் : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம் அருகே நெற்பயிர்களை நாசமாக்கிய பன்றிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் அதிரடியாக நேற்று பிடிக்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடந்துள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே செல்லூர், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பன்றிகள் சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களில் புகுந்து நெற்பயிர்களை சேதம்படுத்தி வந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் பெய்த கன மழையால் இளம் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கியது.
மழை நீடிக்காத காரணத்தால் விவசாயிகள் தொடர் முயற்சியால் லேசாக அழுகிய நிலையில் இருந்த இளம்சம்பா பயிர்களை பாதுகாத்தோம்.

அதையும் தாண்டி காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பயிர்களில் சூழ்பிடிக்கும் நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலையில் இருந்தும் தப்பித்து வருகிறோம்.ஆனால் இது போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து நெற் பயிர்களை விவசாயிகள் ஆகிய நாங்கள் பாதுகாத்து வந்தாலும் பன்றிகளின் தொல்லையால் பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி விடுகிறது.

நாகப்பட்டினம் அருகே சங்கமங்கலம், அழிஞ்சமங்கலம், செல்லூர், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் அறுவடைக்கு இருக்கும் பயிர்களை பன்றி கூட்டங்கள் புகுந்து நாசமாக்கி விடுகிறது. விவசாயிகள் பன்றிகளை விரட்ட முயற்சி செய்தால் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும்.

பன்றி வளர்க்கும் உரிமையாளர்கள் பன்றிகளை தங்களது சொந்த பொறுப்பில் பாதுகாத்து வளர்க்க செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் விவசாயிகள் நாகப்பட்டினத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெற்பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரையில் இருந்து 20க்கும் அதிகமான பேர் பன்றிகளை பிடிக்க வந்தனர்.40க்கும் அதிகமான போலீசாருடன் தாசில்தார் ரமேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் விவசாயிகள் தெரிவித்த இடங்களுக்கு நேற்று அதிரடியாக சென்றனர். பன்றிகள் இருக்கும் இடத்திற்கு முன்பு பன்றிகளை பிடிக்கும் நபர்கள் வலைகளை விரித்து பன்றிகளை விவசாயிகள் ஒத்துழைப்புடன் விரட்ட தொடங்கினர். பன்றிகள் சப்தம் கேட்டு ஓடி வந்து விரிக்கப்பட்டுள்ள வலைகளில் மாட்டியது.

இவ்வாறு வலைகளில் மாட்டிய பன்றிகறை பன்றிபிடிப்பவர்கள் கை மற்றும் கால்களை காட்டி தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர். நேற்று காலை முதல் மாலை வரை 60க்கும் அதிகமான பன்றிகளை விரட்டி பிடித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிரடியாக கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் உத்தரவிட்டு போலீசார் பாதுகாப்புடன் பன்றிகளை பிடித்தது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெற்பயிற்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Nagapatnam ,Janidam Varghese ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...