×

சோமாலியா அருகே சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. 15 மாலுமிகளின் நிலை என்ன ?

மும்பை: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் 15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ‛ எம்வி லிலா நார்போல்க்’ என்ற சரக்கு கப்பலை சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்துள்ளன. மேலும் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளைத் தொடர்பு கொண்டு கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த கப்பலில் உள்ள கேப்டனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் நகர்வை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.சமீபகாலமாக அரபிக் கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடத்தல் அச்சுறுத்ததலுக்கு மத்தியில் தான் சரக்கு கப்பல்கள் அங்கு பயணிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலுமி ஒருவரை இந்திய கடற்படை மீட்டது.

The post சோமாலியா அருகே சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. 15 மாலுமிகளின் நிலை என்ன ? appeared first on Dinakaran.

Tags : Somalia ,Mumbai ,Indian Navy ,Liberia ,West Africa ,Dinakaran ,
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது