×

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ₹20 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்ஐ அதிரடி கைது

*லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை

திருமலை : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்சி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் சாதகமாக செயல்பட ரூ.20 லஞ்சம் பெற்ற எஸ்ஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், தர்ஷி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் ராமகிருஷ்ணா. இவர் வழக்கு ஒன்றில் சாதகமாக செயல்பட ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய பணத்தை அவரிடம் வழங்கி எஸ்.ஐ.யிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட அவர் நேற்று காவல் நிலையத்திற்கு சென்று ரூ.20 ஆயிரம் பணத்தை எஸ்.ஐ.ராமகிருஷ்ணனிடம் வழங்கியுள்ளார். அதனை பெற்று தனது மேஜையில் வைத்துபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து எஸ்ஐ ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ₹20 ஆயிரம் லஞ்சம் பெற்ற எஸ்ஐ அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Prakasam district of Andhra Pradesh ,Tirumala ,Prakasam district of ,Andhra state ,
× RELATED பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது