×

பேரளி கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

 

பெரம்பலூர்,ஜன.5: ஆதிதிராவிடர் சமூகத்தினர் பயன்படுத்தும் சுடுகாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கக்கோரி பேரளி கிராமத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த அம்பேத்கர் தெரு மக்கள் நேற்று 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: பேரளி கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.

200 ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் பயன்படுத்தி வந்த இடத்தை தற்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் சிலரது தூண்டுதலின் பேரில், சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, எங்கள் முன்னோர்களின் உடலை அடக்கம் செய்த இடத்தை அளித்தும், சேதப்படுத்தியும், முள் கம்பி அமைத்தும் தடுத்தும் உள்ளனர்.

எனவே ஆதிதிராவிட சமூகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை அழித்தும் சேதப்படுத்தியும் தடுத்தும் வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வழங்கிட வேண்டுமென அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகார் மனுவை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடமும், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை உதவி இயக்குனரிடமும் அளித்து விட்டுச் சென்றனர்.

The post பேரளி கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Barali ,PERAMBALUR ,BADAKORI ,PERAMBALUR DISTRICT ,ADITRAVIDAR COMMUNITY ,Ambedkar Street ,Kunnam Taluka, Perali ,Perali ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...