×

ஆஸி-பாக். டெஸ்ட் ஆட்டம் மழையால் பாதிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் சிட்னி நகரில் நடக்கிறது. முதலில் களம் கண்ட பாக் அணி முதல் இன்னிங்சில் முதல் நாளே ஆட்டம் இழந்தது. ஆனாலும் பாக் 77.1ஓவர் விளையாடி 313ரன் குவித்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி ஒரு ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது வானிலை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று களத்தில் இருந்த டேவிட் வார்னர் 6, உஸ்மான் கவாஜா 0ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.

பொறுமையாக விளையாடிய வார்னர் 34 ரன்னிலும். அரை சதத்தை நெருங்கிய காவாஜா 47ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு மார்னஸ் லபுஷேன் 23, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது ஆஸி 47ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 116ரன் எடுத்திருந்தது.  மதியம் தொடங்கிய மழை மாலை வரை நீடித்ததாலும், வெளிச்சமின்மை காரணமாகவும் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. எனவே ஆஸி அணி 197ரன் பின்தங்கிய நிலையில் இன்னும் 8 விக்கெட் கைவசம் வைத்திருக்க 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளது. அதற்கு வானிலை வாய்ப்பு தருமா என்பது தான் முக்கிய கேள்வி.

The post ஆஸி-பாக். டெஸ்ட் ஆட்டம் மழையால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sydney ,Australia ,Pakistan ,Bagh ,Puck ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது