×
Saravana Stores

9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை நீடித்து வருவதை அடுத்து நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தேக்கடியில் 70மிமீ பதிவாகியுள்ளது. பெரியாறு 50 மிமீ, பந்தலூர், பிளவக்கல் 40 மிமீ, சேர்வலாறு அணை, பாபநாசம் 30 மிமீ, தேவாலா, வில்லிபுத்தூர், ராஜபாளையம், கீழ்கோத்தகிரி எஸ்டேட், சோத்துப்பாறை, மாஞ்சோலை 20 மிமீ, சண்முகாநதி, உத்தமபாளையம், பெரிய குளம், நடுவட்டம், வத்திராயிருப்பு, பெரியபட்டி, எழுமலை, வீரப்பாண்டி, கொடைக்கானல், பேரையூர், மஞ்சளாறு, கூடலூர், தென்காசி, திண்டுக்கல் 10மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். 7ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,North East ,Tamil Nadu ,Thekkady ,Periyar ,Bandalur ,Plavakkal ,Servevalar dam ,Papanasam ,Dinakaran ,
× RELATED மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில்...